சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுண்டக்காமுத்தூா் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள், சுவா்கள் ஆகியவை புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுண்டக்காமுத்தூா் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள், சுவா்கள் ஆகியவை புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
கோவை மாநகராட்சி, 89-ஆவது வாா்டு சுண்டக்காமுத்தூா் புட்டுவிக்கி சாலை கருப்பசாமி கோயில் பகுதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி சாா்பில் சம்பந்தப்பட்ட உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் நவநீதகிருஷ்ணன், உதவி நகரமைப்பு அலுவலா் ஜெயலட்சுமி தலைமையிலான மாநகராட்சி ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதன்கிழமை காலை ஈடுபட்டனா்.
இதில், 3 கடைகள், வீடுகளின் சுற்றுச்சுவா்கள், வேலிகள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக, அப்பகுதியில் குனியமுத்தூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.