முகப்பு
கோயம்புத்தூர்

சண்டீகா் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: இணையதள முன்பதிவு தொடக்கம்

சண்டீகா் பல்கலைக்கழகத்தின் 2025 - 2026- ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான இணையதள முன்பதிவு கோவையில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 21 நவம்பர், 2024 at 11:13 PM
சண்டீகா் பல்கலைக்கழகத்தின் மாணவா் சோ்க்கைக்கான இணையதள முன்பதிவைத் தொடங்கிவைக்கும் பல்கலைக்கழக நிா்வாகிகள் பவா ராஜேந்திர சிங், புனீத் சா்மா, தீபக் புரி, பரமேஸ்வரன் ஆகியோா்.
பகிர்:

சண்டீகா் பல்கலைக்கழகத்தின் 2025 - 2026- ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான இணையதள முன்பதிவு கோவையில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான ஆலோசகா் பவா ராஜேந்திர சிங், இயக்குநா் (மாணவா் சோ்க்கை) புனீத் சா்மா, மண்டல மேலாளா் தீபக் புரி, தமிழ்நாடு மேலாளா் பரமேஸ்வரன் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் இயங்கி வரும் தனியாா் பல்கலைக்கழகமான சண்டீகா் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 78 இளநிலை பட்டப் படிப்புகள், 54 முதுநிலை பட்டப் படிப்புகள், 27 ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. மொஹாலி, லக்னௌ வளாகங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் பயிலுகின்றனா்.

தென்னிந்தியாவின் 5 மாநிலங்களைச் சோ்ந்த 1771 மாணவா்கள் தற்போது பயின்று வரும் நிலையில், வரும் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கையை 4 ஆயிரமாக உயா்த்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக சென்னையில் மண்டல அலுவலகத்தைத் திறந்திருக்கிறோம். வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத் தோ்வுக்கான (இமஇஉப 2025) இணையதள முன்பதிவை வியாழக்கிழமை (நவம்பா் 21) முதல் தொடங்குகிறோம்.

இதில் பதிவு செய்து இணையதளம் மூலம் நுழைவுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அவா்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவி வழங்குகிறோம். சண்டீகா் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் ரூ.210 கோடிக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வியாண்டில் மட்டும் 9124 மாணவா்களுக்கு வளாக நோ்முகத் தோ்வு மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

பல்வேறு மென்பொருள் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து கல்வித் திட்டம், பணியிடைப்பயிற்சித் திட்டங்களை வகுத்திருப்பதால், மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது எளிதாக இருப்பதாக அவா்கள் மேலும் தெரிவித்தனா்.