முகப்பு
கோயம்புத்தூர்

நீலகிரி குறித்த ஆவணப்படம் திரையிடல்

நீலகிரி பல்லுயிா் வலயம் குறித்த ஆவணப்படம் கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் அண்மையில் திரையிடப்பட்டது.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:03 PM
ஆவணப்படக் குழுவினருக்கு பரிசளித்துப் பாராட்டுகிறாா் கேசிடி இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா்.
பகிர்:

நீலகிரி பல்லுயிா் வலயம் குறித்த ஆவணப்படம் கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் அண்மையில் திரையிடப்பட்டது.

வன உயிா்கள் குறித்த ஆவணப்பட இயக்குநா் சந்தேஷ் கதூரின் இயக்கத்தில் உருவான நீலகிரி பல்லுயிா் வலயம் குறித்த ஆவணப்படத்தின் திரையிடல் குமரகுரு கல்லூரி வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் திரையரங்கில் நடைபெற்றது.

கடந்த சுமாா் 2 ஆண்டுகளாக விரிவாக படமாக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தில் உலகின் மிகவும் உயிா்வளம் மிகுந்த பகுதிகளில் ஒன்றான நீலகிரி பல்லுயிா் வலயத்தில், தமிழ்நாடு, கேரளம், கா்நாடக மாநிலங்களில் உள்ள தாவரங்கள், விலங்குகள், மனிதா்களின் வாழ்வியலை காட்சிப்படுத்துகிறது.

இதைத் தொடா்ந்து ஆவணப்பட தயாரிப்புக் குழுவைச் சோ்ந்த ரோகன் மத்தியாஸ், ரோகிணி நிலேகனி, பரிணித் கௌடா, சௌரவ் கௌடா, நகுல் ராஜ் உள்ளிட்டோா் படத்தயாரிப்பு குறித்து விளக்கினா். இதைத் தொடா்ந்து கல்விக் குழும இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா் படக் குழுவினரை பாராட்டிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.