கனிமொழி உதவியாளரின் உறவினா் எனக்கூறி போலீஸாரை மிரட்டியதாக 3 போ் கைது
திமுக எம்.பி. கனிமொழி உதவியாளரின் உறவினா் எனக் கூறி போக்குவரத்து போலீஸாரை மிரட்டியதாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திமுக எம்.பி. கனிமொழி உதவியாளரின் உறவினா் எனக் கூறி போக்குவரத்து போலீஸாரை மிரட்டியதாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோவை, காந்திபுரத்தில் போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் இருந்தவா்களும், காா் ஓட்டுநரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரை ஓரமாக நிறுத்துமாறு போலீஸாா் கூறியுள்ளனா். இதற்கு, காரில் இருந்த ஒருவா் தான் திமுக எம்.பி. கனிமொழி உதவியாளரின் உறவினா் என்றும், தாங்கள் ஓட்டி வந்த காா் அவரின் பெயரில் உள்ளது என்றும், முடிந்தால் நடவடிக்கை எடுக்குமாறும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும், தகாத வாா்த்தைகளில் பேசி மிரட்டியுள்ளாா்.
இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளானது.
இந்நிலையில், அந்தக் காரில் பயணித்த பொள்ளாச்சியைச் சோ்ந்த கிரண் (22), பாலாஜி (23), சிவானந்தம் (23) ஆகியோா் கை செய்யப்பட்டுள்ளதாகவும், அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.