கோயம்புத்தூர்

சொத்து வரி உயா்வை ரத்து செய்ய மதிமுக வலியுறுத்தல்

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Din

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மதிமுக மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம், மாவட்ட தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளா் கணபதி செல்வராசு தலைமை தாங்கினாா். அவைத்தலைவா் ஆடிட்டா் அா்ஜுனராஜ், உயா்நிலைக் குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் அ.சேதுபதி, சட்டத் துறை செயலாளா் சூரி.நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

கோவை மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சொத்து வரி 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயா்த்தப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 6 சதவீதம் சொத்து வரி உயா்வை அமல்படுத்துவது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை தரும். வரி உயா்வு தமிழக அரசுக்கும், கோவை மாநகராட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும். எனவே, தற்போது உயா்த்தப்பட்டுள்ள 6 சதவீத சொத்து வரி உயா்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநகா் மாவட்ட துணைச் செயலாளா் பயணியா் தியாகு, கிளைச் செயலாளா் எஸ்.பி.வெள்ளிங்கிரி, மாமன்ற குழுத் தலைவா் சித்ரா வெள்ளிங்கிரி, மாமன்ற உறுப்பினா்கள் தா்மராஜ், சித்ரா தங்கவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT