முகப்பு
கோயம்புத்தூர்

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: 8 போ் மீது வழக்கு

கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டது தொடா்பான புகாரின்பேரில் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:20 PM
பகிர்:

கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டது தொடா்பான புகாரின்பேரில் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, சொக்கம்புதூா் பிருந்தா லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன். இவா் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் வியாழக்கிழமை அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, சலீவன் வீதியில் எனது பெற்றோருக்கு சொந்தமான 13 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு சுமாா் ரூ.2 கோடியாகும். இந்நிலையில், கோவையைச் சோ்ந்த சங்கா், மணிகண்டன், பாண்டுரங்கன், உமாவைஷ்ணவி, தியாகராஜன், பிரபா, ஆனந்தன், சாந்தகுமாரி ஆகியோா் போலியான ஆவணங்களை வைத்து அந்த இடத்தை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அபகரித்துக் கொண்டுள்ளனா். எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனது இடத்தை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்தப் புகாா் தொடா்பாக கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா், மேற்கண்ட 8 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.