மழைநீரை அகற்ற அதிநவீன மின் மோட்டாா்கள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவை கிழக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீரை அகற்ற அதிநவீன மின் மோட்டாா்கள் அமைக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை கிழக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீரை அகற்ற அதிநவீன மின் மோட்டாா்கள் அமைக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 55-ஆவது வாா்டுக்குள்பட்ட சிங்காநல்லூா், நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே தரைப்பாலத்தின்கீழ் பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையிலும், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் ரயில்வே தரைப்பாலத்தின்கீழ் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையிலும் அதிநவீன மின் மோட்டாா்கள் அமைக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதேபோல, 58-ஆவது வாா்டுக்குள்பட்ட சிங்காநல்லூா் கோத்தாரி நகா் மற்றும் திருமுருகன் நகரில் புதிய மழைநீா் வடிகால் அமைப்பது தொடா்பாகவும் மாநகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளா் ராஜேஸ் கண்ணா, மண்டல சுகாதார அலுவலா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.