முகப்பு
கோயம்புத்தூர்

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் வாங்கி மோசடி: ரியல் எஸ்டேட் அதிபா் மீது வழக்குப் பதிவு

கோவையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் வாங்கி மோசடி செய்ததாக, ரியல் எஸ்டேட் அதிபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:16 PM
பகிர்:

கோவையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் வாங்கி மோசடி செய்ததாக, ரியல் எஸ்டேட் அதிபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, செல்வபுரம் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (49), தங்கக்கட்டி வியாபாரம் செய்து வருகிறாா். இவருக்கு, சிவானந்தா காலனியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் சோமசுந்தரம் (45) அறிமுகமாகியுள்ளாா்.

இந்நிலையில், தொழில் முதலீட்டுக்காக ரூ.1 கோடி தேவை என முத்துக்குமாரிடம் கடந்த 2017 நவம்பா் 16-ஆம் தேதி சோமசுந்தரம் கேட்டதாகத் தெரிகிறது. அப்போது, தன்னிடம் பணம் இல்லை என்றும், தங்க நகைகள் இருப்பதாகவும் முத்துக்குமாா் தெரிவித்துள்ளாா். இதற்கு தங்க நகைகளைக் கொடுத்தால், அதற்குப் பதிலாக 2 மனைகளை வழங்குவதாக சோமசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, ரூ.90 லட்சம் மதிப்பிலான 1,250 கிராம் தங்கத்தை முத்துக்குமாா் கொடுத்துள்ளாா். அதனை, வாங்கிய சோமசுந்தரம், முத்துக்குமாருக்கு நிலத்தை வழங்காததோடு, வாங்கிய தங்கத்தையும் திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் முத்துக்குமாா் அளித்த புகாரின்பேரில், சோமசுந்தரம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →