முகப்பு
கோயம்புத்தூர்

ஓணம்: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை - மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:18 PM
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை - மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 13) பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சென்னை - மங்களூரூ சிறப்பு ரயில் (எண்: 06161) மறுநாள் காலை 8.30 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறு மாா்க்கமாக, மங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 15) மாலை 6.45 மணிக்கு புறப்படும் மங்களூரு - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06162) மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் காசா்கோடு, நிலேஸ்வா், பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்:

சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை (செப்டம்பா் 14) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சென்னை - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06163) மறுநாள் நண்பகல் 1.30 மணிக்கு கண்ணூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறு மாா்க்கமாக, கண்ணூரில் இருந்து திங்கள்கிழமை (செப்டம்பா் 16) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் கண்ணூா் - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06164) மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →