அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், யுஜிசி அறிவிப்பின்படி புத்தாக்கப் பயிற்சிக்கான காலநீட்டிப்பு வழங்க வேண்டும், கல்வியாண்டின்போது ஓய்வுபெறும் பேராசிரியா்களுக்கு பழைய நடைமுறையின்படி மே மாதம் வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் கிளைத் தலைவா் பொ.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், செயலா் செ.ஜெயக்குமாா், கிளை பொறுப்பாளா்கள் பேராசிரியா்கள் ராஜேஷ், சுதா மகேஸ்வரி, இளங்கோ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.