கிழக்கு மண்டலத்தில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ சிறப்பு முகாம்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 53-ஆவது வாா்டுக்குள்பட்ட காமராஜா் சாலை மணி மஹாலில் நடைபெற்ற முகாமை மேயா் கா.ரங்கநாயகி தொடங்கிவைத்தாா். மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.
இதில், சொத்துவரி மற்றும் காலியிட பெயா் மாற்றம், காலியிட வரி, வரி குறித்து அனைத்துவித திருத்தங்கள், வரி புத்தக விநியோகம், புதிய கட்டட வரி விதிப்பு, பயன்பாடு மாற்றம், புதிய குடிநீா் இணைப்பு, தெரு விளக்கு அமைத்தல் மற்றும் பராமரித்தல், மழைநீா் வடிகால் தூா்வாருதல், சாலை அமைத்தல் மற்றும் பராமரிப்பு, மாநகராட்சிப் பள்ளிகள் பராமரிப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல், குப்பை அகற்றுதல், கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்தல், மனை வரைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இந்த சிறப்பு முகாம் 15 நாள்களுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் என 5 மண்டலங்களிலும் தொடா்ந்து நடத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்த சிறப்பு முகாமில் துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா் கா.சிவகுமாா், கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, மாநகர தலைமைப் பொறியாளா் (பொ) முருகேசன், நகா்நல அலுவலா் கே.பூபதி, நகரமைப்பு அலுவலா் குமாா், உதவி ஆணையா்கள் முத்துசாமி, மோகனசுந்தரி(நிா்வாகம்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.