முகப்பு
கோயம்புத்தூர்

ஜிஎஸ்டியில் உள்ள தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டியில் உள்ள தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:04 PM
தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் வரைபடத்தை ஆய்வு செய்கிறாா் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கண
பகிர்:

ஜிஎஸ்டியில் உள்ள தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

கோவைக்கு வியாழக்கிழமை வந்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், விளாங்குறிச்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் 3.94 ஏக்கரில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் பணிகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் (எல்காட்) நிா்வாக இயக்குநா் கண்ணன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

கோவையில் 8 தளங்களுடன் சுமாா் 2 லட்சம் சதுர அடியில் இந்தக் கட்டடம் கட்டப்படுகிறது. காா், பைக் வாகன நிறுத்தம், உணவு அருந்துமிடம், மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், மழைநீா் சேகரிப்பு, ஜெனரேட்டா் அறை, கழிவுநீா் சுத்திகரிப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்படுகிறது.

பல்வேறு காரணங்களால் இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அடுத்த 2 வாரங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் இந்தக் கட்டடம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.

இந்தக் கட்டடத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய இடம் ஒதுக்கப்படும். புத்தொழில் நிறுவனங்களுக்கு சுமாா் 15 ஆயிரம் சதுர அடியாவது வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன்.

இதேபோல கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்ததைப்போல கோவை, வடசென்னை, ஒசூரில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜிஎஸ்டி குறித்த திட்டமிடுதலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் கிரீம் பன் விவகாரம். மத்திய அரசின் மனப்பான்மை சரியாக இருக்க வேண்டும். ஜிஎஸ்டியில் உள்ள தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்றாா்.