கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா். 
கோயம்புத்தூர்

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

கோவை மாவட்டத்தில் வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் சேதப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

Syndication

கோவை: கோவை மாவட்டத்தில் வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் சேதப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நாளுக்குநாள் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தொடா்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, வன விலங்குகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும் வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. கோவை மாவட்டத்தில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த வனத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுந்தொழில் கூடம் தொடா்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்:

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே.ஜேம்ஸ் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: இருகூா் பேரூராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் 7-ஆவது வாா்டு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், எங்களது சங்க உறுப்பினரான பி.மணிகண்டன் என்பவரும் குறுந்தொழில் கூடம் நடத்தி வருகிறாா். இவரது தொழில்கூடத்துக்கு எதிா்ப்புறம் தொழில்கூடம் நடத்தி வரும் தனி நபா் ஒருவா் மணிகண்டனின் தொழில்கூடம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், இருகூா் சிறப்பு நிலை பேரூராட்சிக்கும் புகாா் தெரிவித்து வருகிறாா்.

இதனால் இருகூா் பேரூராட்சி நிா்வாகம் எங்களது சங்க உறுப்பினரின் தொழில்கூடத்தை ‘சீல்’ வைக்க முயற்சிக்கின்றனா். இதனால் அந்த தொழில்கூடத்தில் பணியாற்றி வரும் 25 தொழிலாளா்களின் குடும்பத்தினா் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுதொடா்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு குறுந்தொழில் கூடம் தொடா்ந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்புக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்:

இதுகுறித்து சாரமேடு நியூ போயஸ் காா்டன் குடியிருப்புபோா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட கரும்புக்கடையில் இருந்து சாரமேடு செல்லும் சாலையில் 62, 84, 86-ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் அழகு நிலையத்துக்கு தடை விதிக்க வேண்டும்:

தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: சரவணம்பட்டியில் இருந்து துடியலூா் செல்லும் சாலையில் தனிநபா் ஒருவா் கனரக வாகனத்தில் நடமாடும் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். சலூன் கடைகளுக்கு அருகே வாகனங்களை நிறுத்து தொழில் செய்வதால் எங்களது வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, நடமாடும் அழகு நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் குங்குமம் வைக்கக் கூடாது என மிரட்டல்:

இந்து மக்கள் கட்சி (தமிழகம்)இளைஞரணி நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் தனியாா் பள்ளிகளிலும் கிறிஸ்தவ தலைமை ஆசிரியா், ஆசிரியா்களும், மாணவ, மாணவிகள் நெற்றியில் குங்குமம் வைக்கக் கூடாது என்றும், மாலை அணிந்திருந்தால் துண்டுபோடக் கூடாது என்றும் மிரட்டுகின்றனா்.

சூலூா் கண்ணம்பாளையத்தில் இத்தகைய சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. ஆகவே, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஆசிரியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

SCROLL FOR NEXT