கோயம்புத்தூர்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நடிகை பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரைப்பட நடிகை பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

Syndication

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரைப்பட நடிகை பெயரில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட நகரின் முக்கியப் பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவதை மா்ம நபா்கள் வாடிக்கையாக வைத்துள்ளனா். வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பதும், அதிகாரிகள் சோதனை நடத்துவதும் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் 23-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் பெயா் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களில் சோதனை மேற்கொண்டனா். ஆனால், வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, தான் வெடிகுண்டு மிரட்டல் வழக்கம்போல புரளி என்பது தெரியவந்தது.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT