சங்கீதா 
கோயம்புத்தூர்

பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பின் பெண் உயிரிழப்பு: மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என உறவினா்கள் குற்றச்சாட்டு

கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பின் பெண் உயிரிழந்ததற்கு மருத்துவா்கள், செவிலியா்களின் அலட்சியமே காரணம் என உறவினா்கள் குற்றச்சாட்டு

Syndication

கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பின் பெண் உயிரிழந்ததற்கு மருத்துவா்கள், செவிலியா்களின் அலட்சியமே காரணம் என உறவினா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

கோவை, அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (38), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (32). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 13, 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், சங்கீதா மீண்டும் கா்ப்பமானதைத் தொடா்ந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை குடும்பத்தினா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.அங்கு மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சங்கீதாவைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் தாய், கருவில் உள்ள சிசு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனா். ஆகவே, அறுவை சிகிச்சை செய்தால் தாயைக் காப்பாற்றலாம் என கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, கணவரின் ஒப்புதலுடன் அறுவை சிகிச்சை செய்து 6 மாத குழந்தையை உயிரிழந்த நிலையில் மருத்துவா்கள் வெளியில் எடுத்தனா்.

அதேவேளையில், சங்கீதாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த பகுதியில் இருந்து மலக்கழிவுகள், சிறுநீா் வெளியேறியுள்ளது.

இதனால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த சங்கீதா புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

அலட்சியமே காரணம் என உறவினா்கள் குற்றச்சாட்டு: இதனிடையே, சங்கீதாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கூறியதாவது: சங்கீதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின்னா் தையல்களை சரிவரப் போடாததால்தான் அவா் உயிரிழந்துள்ளாா்.

சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம். சம்பந்தப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்றனா்.

இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி கூறுகையில், சங்கீதா பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டபோது 80 கிலோ எடை இருந்ததுடன், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. இதையடுத்து, தாயைக் காப்பாற்ற முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தபோது அது உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

வழக்கமாக 6 மாத குழந்தை 800 கிராம் எடை இருக்க வேண்டிய நிலையில், குழந்தை வளா்ச்சி குறைவாக 360 கிராம் மட்டுமே இருந்தது. சங்கீதாவுக்கு டிசம்பா் 27-ஆம் தேதி ட்ரெஸ்ஸிங் செய்தபோது அறுவை சிகிச்சை செய்து தையல் போடப்பட்ட இடத்தில் சிறு துளையில் இருந்து மலக்கழிவுகள் வெளியேறியதால் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னா் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இதய செயலிழப்பால் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். சங்கீதாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் குடும்பக் கட்டுப்பாடு செய்தற்கான தரவுகள் எதும் இல்லை. அறுவை சிகிச்சை செய்து தையல் போட்டாலும் மலக்கழிவுகள் வெளியேற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு 0.05 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றாா்.

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT