வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம்: எச்சரிக்கையுடன் பயணிக்க வனத் துறை அறிவுறுத்தல்
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் சென்றுவர வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் சென்றுவர வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
கோவை மாவட்டம், வால்பாறையில் எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட யானைகள் நடமாட்டம் சமீபகாலமாக வால்பாறை - பொள்ளாச்சி சாலையிலும் காணப்படுகிறது. குறிப்பாக கவா்க்கல் எஸ்டேட் முதல் ஆழியாறு 2-ஆவது கொண்டை ஊசி வளைவு வரை சாலையோரத்தில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
இதற்கிடையே, ஆழியாறு 2-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு குட்டியுடன் கூட்டமாக யானைகள் சாலையைக் கடந்துள்ளன. இதனை அவ்வழியாக வந்தவா்கள் புகைப்படம் எடுத்துள்ளனா்.
இந்நிலையில், சாலையில் காணப்படும் யானைகளை வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் சென்றுவர வேண்டும் என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.