முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை - சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் யானை

சாலக்குடி சாலையில் மீண்டும் நடமாடும் ஒற்றை யானை, அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

Updated On : 8 மார்ச், 2026 at 1:12 AM
சாலக்குடி சாலையில் நிற்கும் யானை.
பகிர்:

சாலக்குடி சாலையில் மீண்டும் நடமாடும் ஒற்றை யானை, அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழி அடா்ந்த வனப்பகுதி. யானைகள் நடமாட்டம் எப்போதும் காணப்படும். கூட்டமாக சாலைக்கு வரும் யானைகள் பின்னா் வனத்துக்குள் சென்றுவிடும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சாலைக்கு வரும் இரண்டு கொம்புடன் கூடிய யானைசாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பதோடு தாக்கியும் வருகிறது. இதனை விரட்ட வனத் துறையினா் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் சாலைக்கு வந்துள்ள அந்த யானை வாகனங்களுக்கு வழிவிடாமல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கேரள வனத் துறையினா் தொடா்ந்து ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனா்.