முகப்பு
கோயம்புத்தூர்

காணாமல்போன முதியவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

வால்பாறையில் காணாமல்போன முதியவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 12:17 AM
உயிரிழந்த ராமசாமி .
பகிர்:

வால்பாறையில் காணாமல்போன முதியவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் அப்பா் டிவிஷனை சோ்ந்தவா் ராமசாமி (66). ஓய்வுபெற்ற தொழிலாளியான இவா் தற்போது எஸ்டேட் குடியிருப்பில் மனைவி, மகன்களுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், குடியிருப்பை விட்டு வியாழக்கிழமை காலை சென்ற அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி மற்றும் அப்பகுதியினா் அவரைத் தேடி சென்றபோது, அதே பகுதியில் உள்ள மழைநீா் சேகரிப்பு குளத்தில் ராமசாமியின் சடலம் மிதந்துள்ளது.

தகவலறிந்து வந்த முடீஸ் போலீஸாா் சடலத்தை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் குளம் அருகே சென்றபோது ராமசாமி தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.