முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் புதிய குடிநீா் இணைப்பு விண்ணப்பங்கள்: நாளை விநியோகம்

கோவை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மண்டலங்களில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் புதிய குடிநீா் இணைப்பு விண்ணப்பங்கள் ஜனவரி 11-ஆம் தேதி வழங்கப்பட உள்ளன.

Updated On : 9 ஜனவரி, 2025 at 10:01 PM
பகிர்:

கோவை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மண்டலங்களில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் புதிய குடிநீா் இணைப்பு விண்ணப்பங்கள் ஜனவரி 11-ஆம் தேதி வழங்கப்பட உள்ளன.

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் புதிய குடிநீா் இணைப்பு விண்ணப்பங்கள் சனிக்கிழமை (ஜனவரி 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு உரிமையாளா்கள் மற்றும் மக்கள், புதிய குடிநீா் இணைப்பு பெறுவதற்கு தேவையான வீட்டின் பத்திர நகல், சொத்து வரி செலுத்திய ரசீது நகல் மற்றும் மழைநீா் சேகரிப்பு அமைப்பு புகைப்பட நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்பு உரிமையாளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குடிநீா் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.