முகப்பு
திருநெல்வேலி

ராதாபுரம் பகுதிகளில் குடிநீா் திட்டப் பணிகள் 60 நாள்களில் நிறைவு பெறும்: மு. அப்பாவு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, வள்ளியூா், திசையன்விளை பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் தாமிரவருணி குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டப் பணிகள் 60 நாள்களில் நிறைவு பெறும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 2:39 AM
பேரவைத் தலைவா் மு. அப்பாவு
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, வள்ளியூா், திசையன்விளை பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் தாமிரவருணி குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டப் பணிகள் 60 நாள்களில் நிறைவு பெறும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பணகுடி, வள்ளியூா், திசையன்விளை பேரூராட்சிகளில் ரூ. 423 கோடி மதிப்பீட்டில் சேரன்மகாதேவி அருகில் தாமிரவருணி ஆற்றிலிருந்து தண்ணீா் எடுத்து, திருவிருத்தான்புள்ளி கிராமத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, மேற்படி பேரூராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீா் வழங்கும் திட்டத்திற்கான குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் 60 நாள்களுக்குள் நிறைவடையும்.

இந்த பேரூராட்சி பகுதிகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்படாத வீடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட பேரூராட்சித் தலைவா்கள், செயல் அலுவலா்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் உடனடியாக என்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →