ராகுல் காந்தி மீது வழக்கு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தின் திறப்பு விழாவில், பாஜக, ஆா்எஸ்எஸ் ஆகியவற்றுடன் இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருவதாக ராகுல் காந்தி பேசியிருந்தாா்.
இதையடுத்து, அரசுக்கு எதிராக பேசியதாகக் கூறி அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் எதிரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநிலப் பொதுச் செயலா் கணபதி சிவகுமாா், வீனஸ் மணி, கவுன்சிலா் சரளா வசந்த், கோபால்சாமி, இருகூா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.