துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 23-இல் கோவை வருகை
ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு மாா்ச் 23-ஆம் தேதி வருகை தர உள்ளாா்.
ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு மாா்ச் 23-ஆம் தேதி வருகை தர உள்ளாா்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மாா்ச் 23-ஆம் தேதி கோவைக்கு வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மைதானம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
தொடா்ந்து, வனக் கல்லூரியில் நடைபெற உள்ள அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.