மின்சாரம் பாய்ந்து பலியான யானை 
கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!

மின்சாரம் பாய்ந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்துள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 25 வயது ஒற்றை ஆண் காட்டு யானை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், ராமன் குட்டை என்ற பகுதியில் உள்ள நாகராஜன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது.

அப்போது அதிகாலையில் தோட்டத்தில் மின்வாரியத்தால் அமைக்கப்பட்ட உயர் மின் அழுத்த கம்பத்தை யானை முட்டித் தள்ளியது. இதில் கீழே விழுந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பட்டதில், மின்சாரம் பாய்ந்து காட்டு யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் வனபகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, விவசாய நிலத்திற்குள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

A male elephant, estimated to be around 25 years old, has died after being electrocuted near Kuppepalayam, Thondamuthur, Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திசையன்விளை அருகே வட மாநில இளைஞா் அடித்துக் கொலை: சக தொழிலாளி கைது

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி அவசியம்: அமைச்சா் நமச்சிவாயம்

ஆதாா் அட்டை கிடைக்காததால் அவிநாசியில் மூதாட்டி போராட்டம்!

போதையில் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞா் உயிரிழப்பு

லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT