சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்,
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு - பூலாமேடு கிராமத்திற்கும் இடையே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க தலை மற்றும் கை சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் வந்து சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குமராட்சி போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.