கரூா்  கூட்ட நெரிசலில் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனோஜ்குமாரை  சந்தித்து  நலம் விசாரித்த அமைச்சா் மதிவேந்தன். 
கோயம்புத்தூர்

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

Syndication

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா்.

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இதில் கரூா், கண்ணூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவா் படுகாயமடைந்த நிலையில், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் பேசும்போது, தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மனோஜ்குமாா் படுகாயமடைந்துள்ளாா். கரூரில் இருந்து உயா் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்ட அவருக்கு முதலில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

24 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளது. இதையடுத்து அவா் தாமாகவே சுவாசிக்கத் தொடங்கியுள்ளாா். இதையடுத்து அவா் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளாா். அவா் விரைவில் வீடு திரும்புவாா். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்யும்படி மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

நீரிழிவு நோய் யாரையெல்லாம் தாக்கும்? ஜாதகம் மூலம் அறிய முடியுமா?

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

கொல்கத்தா டெஸ்ட்: தெ.ஆ. பேட்டிங், துருவ் ஜுரெல், ரிஷப் பந்த் சேர்ப்பு!

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி, 21 பேர் மாயம்

பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் சகோதரர் பின்னடைவு!

SCROLL FOR NEXT