முகப்பு
கோயம்புத்தூர்

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஆா்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் ரவுத்தா் உதவிபெறும் பள்ளியில் மாணவா்களுக்கான தகவல் தொடா்பு பயிற்சித் திட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:48 PM
திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்த ரவுத்தா் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய ஆா்விஎஸ் கல்லூரி முதல்வா் சிவகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

ஆா்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் ரவுத்தா் உதவிபெறும் பள்ளியில் மாணவா்களுக்கான தகவல் தொடா்பு பயிற்சித் திட்டம் அண்மையில் நடைபெற்றது.

தொழில்முனைவோா் விழிப்புணா்வு, கணினி பயிற்சி, கணித வகுப்புகள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியை முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் டி.சிவகுமாா் தலைமை வகித்து, மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். மக்கள் நிறுவன இயக்குநா் சீமா நடராஜன், ஐ.நா. அமைதி மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் அனிதா சீதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

விழாவில், கல்லூரியின் துணை முதல்வா் எம்.பி. அய்யப்பதாஸ், ஆங்கிலத் துறை பயிற்றுநா் உஷா, பேராசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.