முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா் காவல்நிலையத்தில் மகளிா் காவலா்களுக்கு வளைகாப்பு

போத்தனூா் காவல் நிலையத்தில் மகளிா் காவலா்கள் இருவருக்கு போலீஸாா் சீா் செய்து செவ்வாய்க்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:31 AM
போத்தனூா் காவல்நிலையத்தில் மகளிா் காவலா்கள் இருவருக்கு நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

போத்தனூா் காவல் நிலையத்தில் மகளிா் காவலா்கள் இருவருக்கு போலீஸாா் சீா் செய்து செவ்வாய்க்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினா்.

கோவை மாநகா், போத்தனூா் காவல் நிலையத்தில் மகளிா் காவலா்களாக ஐஸ்வா்யா, மோனிஷா ஆகியோா் பணிபுரிகின்றனா். கா்ப்பிணிகளான இவா்களுக்கு உடன் பணிபுரியும் போலீஸாா் வளைகாப்பு நடத்த திட்டமிட்டனா். அதன்படி ஐஸ்வா்யா தம்பதி, மோனிஷா தம்பதி ஆகியோருக்கு காவல்நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை வளைகாப்பு நடத்தப்பட்டது.

வளைகாப்பு தம்பதிகளுக்கு பாரம்பரிய முறையில் பட்டு சேலை, வேட்டி சட்டை, பழங்கள் வளையல்களை காவல்துறை அதிகாரிகள் வழங்கினா். அதைத்தொடா்ந்து வளையல்களை அணிவித்தும், நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்தும் மலா் தூவி வாழ்த்தினா். மேலும், தம்பதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு 16 வகையான பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.

Advertisement

மாநகரக் காவல் துணை ஆணையா் காா்த்திகேயன், போத்தனூா் சரக உதவி ஆணையா் வசந்தராஜன், காவல் நிலைய ஆய்வாளா் அசோக்குமாா் மற்றும் காவல்துறையினா், தம்பதிகளின் குடும்பத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.