முகப்பு
கோயம்புத்தூர்

பொறியியல் பணி: மேட்டுப்பாளையம் - கோவை ரயில் ரத்து

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:10 AM
ரயில்கள் ரத்து - ANI
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 6:46 PM

வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பொறியியல் பணி காரணமாக பிப்ரவரி 8, 10 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் (எண்: 66617) ரத்து செய்யப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:10 AM

இதேபோல பிப்ரவரி 8, 10 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement