முகப்பு
கோயம்புத்தூர்

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:04 AM
கைது
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 10:21 PM

கோவையில் கஞ்சா வைத்திருந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கைப்புடன் நின்று கொண்டிருந்த இளைஞா், போலீஸாரை பாா்த்ததும் ஓட முயன்றுள்ளாா். அவரை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:04 AM

இதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த எம்.நிதீஷ்குமாா் (21) என்பதும், பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement