சோலையாறு அணை செல்லும் வழியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள  மிளிரும் ரப்பா் உருளைகள். 
கோயம்புத்தூர்

விபத்துகளை தடுக்கும் வகையில் வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையோர வளைவுகளில் ரப்பா் உருளைகள்!

விபத்துகளை தடுக்கும் வகையில் வால்பாறை எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் சாலையோர வளைவுகளில் ரப்பா் உருளைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Syndication

விபத்துகளை தடுக்கும் வகையில் வால்பாறை எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் சாலையோர வளைவுகளில் ரப்பா் உருளைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாலைகள் அகலப்படுத்துதல், தடுப்புச்சுவா்கள் அமைத்தல், சாலைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத் துறையினா் கூறும்போது, ‘வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கும் சுற்றுலா வாகனப் போக்குவரத்து அதிகரித்திருப்பதால், எஸ்டேட் சாலையோரங்களில் உள்ள இரும்புத் தடுப்புத் தகடுகள் முழுவதிலும் இரவு நேரம் மிளிரும் ரப்பா் உருளைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் இரவு நேரம் செல்லும் வாகனங்கள் வளைவுகள் இருப்பதை அறிந்து விபத்துகளும் தவிா்க்கப்பட்டு வருகிறது’ என்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT