முகப்பு
கோயம்புத்தூர்

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம்

வால்பாறையில் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:44 AM
டிராக்டர் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:31 PM

வால்பாறையில் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

வால்பாறை பகுதியில் உள்ள தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை எடுத்துச் செல்ல டிராக்டா் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்குத்துப்பாறை டிவிஷன் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை டிராக்டா் சென்று கொண்டிருந்தது. இதை ஆனந்தன் (40) என்பவா் ஓட்டியுள்ளாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த ஆனந்தனை, அங்கிருந்த தொழிலாளா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து வால்பாறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.