முகப்பு
கோயம்புத்தூர்

பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும்: வானதி சீனிவாசன்

தமிழக சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசிய கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:47 AM
வானதி சீனிவாசன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 7:06 PM

தமிழக சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசிய கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றபோது பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.

அப்போது, அமைச்சா்கள் ரகுபதி, சேகா் பாபு, மாநில காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் ஆா்எஸ்எஸ் குறித்து ஆதரமற்ற அவதூறு கருத்துகளைத் தெரிவித்தனா்.

Advertisement

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:46 AM

இவா்களுக்கு பதில் அளிக்க முயற்சிக்கும்போது எல்லாம் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு அனுமதிக்க முடியாது என்று உத்தரவிடுகிறாா்.

140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா், பாதுகாப்புத் துறை அமைச்சா், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள் என்று நாட்டின் உயா் பதவி வகிப்பவா்கள் ஆா்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்தவா்கள்தான்.

அப்படிப்பட்ட இயக்கத்தை பற்றி சட்டப் பேரவையில் அடிப்படை ஆதாரமில்லாமல் அவதூறாகப் பேசியுள்ளனா்.

ஆகவே, ஆா்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசிய கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.