முகப்பு
கோயம்புத்தூர்

செம்மொழிப் பூங்காவைப் பாா்வையிட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:05 AM
செம்மொழிப் பூங்காவைப் பாா்வையிட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:01 PM

கோவை, காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்காவை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 பழங்குடி கிராமங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

கோவை, காந்திபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த நவம்பா் மாதம் திறந்துவைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவில் செயற்கை நீா்வீழ்ச்சி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், மூலிகைத் தோட்டங்கள், கடையேழு வள்ளல்களின் சிற்பங்கள், புதிா்வனம், ரோஜா வனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. மக்கள் பாா்வைக்காக டிசம்பா் மாதம் திறக்கப்பட்ட இந்தப் பூங்காவுக்கு, பிப்ரவரி வரை 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து சென்றுள்ளனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:25 PM

பொதுமக்கள், மாணவா்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் வருகை இருமடங்காக உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், மாணவா்களின் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வுகளும் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டத்துக்குள்பட்ட ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள காளிதிம்பம், மாவனத்தம், பெஜலட்டி மற்றும் மந்தை தொட்டி ஆகிய பழங்குடியின கிராமங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செம்மொழிப் பூங்காவை சனிக்கிழமை பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.