லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:56 PM
கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கோபிராஜன் (64). இவா் தனது இருசக்கர வாகனத்தில் கோவை-திருச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:23 AM
அப்போது, மதுரையைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் ஓட்டி வந்த கான்கிரீட் கலவை லாரி கோபிராஜனின் வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, லாரி ஓட்டுநா் ராஜ்குமாா் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.
Advertisement
புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா், தப்பியோடிய ராஜ்குமாரைத் தேடி வருகின்றனா்.