முகப்பு
கோயம்புத்தூர்

குடிமைப் பணிகள் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மேலும் 3 நாள்கள் அவகாசம்

குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:29 AM
மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:51 AM

குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில், ‘குடிமைப் பணிகள் தோ்வு 2026, இந்திய வனப் பணி தோ்வு 2026 ஆகியவற்றுக்கான இணையவழி விண்ணப்பங்களை பிப்.27 மாலை 6 மணி வரை சமா்ப்பிக்கலாம். வலைதளத்தில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி தலைவா் அஜய் குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘யுபிஎஸ்சி விண்ணப்ப தளத்தில் செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சில தோ்வா்கள் அவதிக்குள்ளாக நோ்ந்த நிலையில், அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

Advertisement