முகப்பு
கோயம்புத்தூர்

ஆற்றில் சிக்கி தவித்த சுற்றுலாப் பயணிகள் மீட்பு

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் 15 பேரை கேரள வனத் துறையினா் மீட்டனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:38 AM
பெரிங்கல்குத்து  ஆற்றில் சிக்கியவா்களை மீட்க வனத் துறையினா்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:16 PM

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் 15 பேரை கேரள வனத் துறையினா் மீட்டனா்.

வால்பாறை- கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவிக்கு இடையே சுற்றுலாப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் அங்குள்ள ஆற்றில் குளிப்பது வழக்கம்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:38 AM

இந்நிலையில், அதிரப்பள்ளி அருவிக்கு செல்லக்கூடிய பெரிங்கல்குத்து ஆற்றில் தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்து சுற்றுலாப் பயணிகள் 15 போ் புதன்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா்.

Advertisement

அப்போது, மின் உற்பத்திக்காக அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து தண்ணீா் திறந்துள்ளனா். இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்தனா். தகவலறிந்து விரைந்து சென்ற கேரள வனத் துறையினா் மற்றும் மீட்புக் குழுவினா் 15 பேரையும் மீட்டனா்.