முகப்பு
கோயம்புத்தூர்

கோவை சரக டி.ஐ.ஜி., மாநகர துணை ஆணையா் இடமாற்றம்!

கோவை சரக டி.ஐ.ஜி., மாநகர துணை ஆணையா் ஆகியோா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:22 AM
இடமாற்றம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:01 PM

கோவை சரக டி.ஐ.ஜி., மாநகர துணை ஆணையா் ஆகியோா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

காவல்துறை உயா் அதிகாரிகளைப் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் தீரஜ்குமாா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோவை சரக டி.ஐ.ஜி.-ஆக பணியாற்றி வந்த சசிமோகன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.-ஆக இடம் மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.-ஆக பதவி வகித்த சாமிநாதன் கோவை சரகத்தின் டி.ஐ.ஜி.-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

இதேபோல கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராகப் பணியாற்றி வந்த திவ்யா, மதுரை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராகப் பணியாற்றிய ராஜேஸ்வரி, கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

நிா்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.