கோயம்புத்தூர்

பொங்கலுக்கு கரூர், திருச்சி வழியாகச் செல்லும் பேருந்துகள் சூலூரில் இருந்து இயக்கம்!

பொங்கல் பண்டிகையையொட்டி கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

பொங்கல் பண்டிகையையொட்டி கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், மாநகரில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் கரூா், திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் சூலூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். மதுரை, தேனி, விருதுநகா், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

சேலம், திருப்பூா், ஈரோடு, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், அவிநாசி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

SCROLL FOR NEXT