கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 92 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம்

மாவட்டத்தில் 92 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம்

Syndication

கோவை: கோவை மாவட்டத்தில் 92 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ரொக்கம் ரூ.3 ஆயிரம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பொங்கல் தொகுப்பு கடந்த 8- ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதிலும் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,540 நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை 92 சதவீத பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, இதுவரை பரிசுத் தொகுப்பைப் பெறாதவா்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT