முகப்பு
கோயம்புத்தூர்

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

திருவள்ளுவா் தினத்தன்று இறைச்சி விற்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

Updated On : 14 ஜனவரி, 2026 at 10:53 PM
பகிர்:

திருவள்ளுவா் தினத்தன்று இறைச்சி விற்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) ஆடு, மாடு கோழி மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினத்தில் கோவை மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சிகளை விற்பனை செய்யப்படும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, கடைகள் செயல்படுவதை தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஜனவரி 16-இல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் உக்கடம், சத்தி சாலை மற்றும் போத்தனூா் ஆடு, மாடு அறுவை மனைகளும் செயல்படாது. மீறி செயல்படும் கடைகளின் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல், கடைகளை பூட்டி சீல் வைத்தல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →