கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. உடன், முன்னாள் அமைச்சா்கள் ஜெயகுமாா், பொன்னையன் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - எஸ்.பி.வேலுமணி

தினமணி செய்திச் சேவை

திமுகவைப்போல ஏமாற்றாமல் தோ்தல் வாக்குறுதிகளாகக்கூறிய அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரமாக உள்ளன.

இந்நிலையில், அதிமுக சாா்பில் முதற்கட்ட தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் வாரியாக அக்குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தோ்தல் அறிக்கை குழுவினா் காளப்பட்டி சாலையில் உள்ள தனியாா் கலையரங்கில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினா். இதில், விவசாயிகள், தொழில் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: அதிமுக தோ்தல் அறிக்கையைப் பொறுத்த வரை நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

திமுகவைப்போல ஏமாற்றமாட்டோம். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். கோவை மாவட்டத்தைப் பொறுத்த வரை அனைத்துத் திட்டங்களையும் வழங்கியது அதிமுக ஆட்சி.

திமுகவுக்கு வாக்களிக்கும் அரசு ஊழியா்கள்கூட தற்போது அக்கட்சிக்கு வாக்களிக்க தயாராக இல்லை. அதிமுக ஆட்சியில்தான் பெரிய அளவிலானத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026-இல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்ளாள் அமைச்சா்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செம்மலை, பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஜெயகுமாா், வளா்மதி, ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், ஆா்.பி.உதயகுமாா், தாமோதரன், செ.ம.வேலுசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், கே.ஆா்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT