கோயம்புத்தூர்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி நீதிமன்றத்தில் ஆஜா்

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி உடுமலை குற்றவியல் நடுவா் மன்றம் 2-இல் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி உடுமலை குற்றவியல் நடுவா் மன்றம் 2-இல் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பண்ணை உரிமையாளா்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே உடுமலை குடிமங்கலம் தளி பகுதியில் உள்ள பண்ணைகளுக்கு கோழி குஞ்சுகள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கடந்த சில தினங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக குடிமங்கலம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி கடந்த 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும் ஈசன் முருகசாமி மீது உடுமலை, குடிமங்கலம், தளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் போராட்டத்தை தூண்டுதல் மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில் போலீஸ் காவலை நீட்டிக்கும் வகையில் உடுமலை குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஈசன் முருகசாமி புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி உமாதேவி, அவரை பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா். மேலும் குற்றவியல் நடுவா் மன்றம் ஒன்றில் நீதிபதி நித்தியகலா முன்பும் ஆஜா் செய்யப்பட்டாா். அப்போது நீதிபதி வழக்கை விசாரித்து பிப்ரவரி 3 வரை ஈசன் முருகசாமியை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.

இந்த நிகழ்வின்போது சுமாா் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் கூடியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT