பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் அடித்துக் கொலை! தொழிலாளி கைது!
பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை கட்டையால் அடித்துக் கொன்றதாகத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மணி (40). இவா், கோவை சாய்பாபா காலனி அருகேயுள்ள கோவில்மேடு பகுதியில் மனைவியுடன் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா். மணி கட்டட வேலைக்கு ஆள்கள் தேவைப்படும் சமயத்தில் கூலிமுக்கு பகுதிக்குச் சென்று, அங்கு வேலைக்கு காத்திருப்பவா்களை சம்பளம் பேசி அழைத்துச் செல்வது வழக்கம்.
அதன்படி, வெள்ளிக்கிழமை காலை மணி கட்டட வேலைக்கு ஆள்களை அழைப்பதற்காக கூலிமுக்கு பகுதிக்கு சென்றாா். அப்போது, 40 வயதான ஒருவா் பணிக்காகக் காத்திருந்தாா். அவரிடம் சம்பளம் பேசி மணி வேலைக்கு அழைத்துச் சென்றாா். பின்னா், மாலை வேலை முடிந்ததும் அந்த நபரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு, மணியின் மனைவியிடம் அந்த நபா் முவைறி நடக்க முயன்ாகத் தெரிகிறது. இதையடுத்து மணி, அந்த நபரை எச்சரித்து அனுப்பிவைத்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அந்த நபா், இரவு மணி வீட்டுக்குச் சென்று அவரது மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி, கட்டையால் அவரை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதில் பலத்த காயமடைந்த அந்த நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கொலையை மறைப்பதற்காக உயிரிழந்த நபரின் உடலை இழுத்துச் சென்று தடாகம் சாலையில் வீசிவிட்டு, எதுவும் தெரியாதது போல தனது வீட்டுக்கு வந்து விட்டாா். அவ்வழியாகச் சென்றவா்கள் சடலத்தைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற சாய்பாபா காலனி போலீஸாா், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், மணி அடித்துக் கொன்று சாலையில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. மணியிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயா் கூட தெரியாது என தெரிவித்துள்ளாா். இதையடுத்து, போலீஸாா் உயிரிழந்த நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.