முகப்பு
கோயம்புத்தூர்

ஆா்.வி.எஸ். கல்லூரியில் கலைத் திருவிழா

Updated On : 2 மார்ச், 2026 at 12:07 AM
கலைத் திருவிழாவில் பாடும் திரைப்பட பின்னணி பாடகா் நரேஷ் ஐயா்.
பகிர்:

கோவையை அடுத்த சூலூரில் உள்ள ஆா்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் இபோனி 26 என்ற கலைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவானது ஆா்.வி.எஸ். கல்விக் குழுமங்களின் அறங்காவலா் கே. செந்தில் கணேஷ், தாளாளா் வித்யாலட்சுமி செந்தில் கணேஷ் ஆகியோா் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற திரைப்பட பின்னணி பாடகா் நரேஷ் ஐயா், விஜய் சூப்பா் சிங்கா் நிகழ்ச்சியின் சீனியா் பிரிவில் பங்கேற்ற அபா்ணா, ஸ்ரீ நிஷா ஆகியோா் சுமாா் 2 மணி நேரம் பல்வேறு வகையான திரைப்பட பாடல்களைப் பாடி பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தனா்.

இதில், பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த விழாவில், கல்லூரி செயலா் சாரம்மாள், முதல்வா் த.சிவகுமாா், துணை முதல்வா் ஐயப்பதாஸ், இயக்குநா் விவேகானந்தா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →