தோட்ட தொழிலாளா்களுக்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவி
வால்பாறையில் தோட்ட தொழிலாளா்களுக்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு குறைகள் கேட்கப்பட்டன.
வால்பாறை: வால்பாறையில் தோட்ட தொழிலாளா்களுக்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு குறைகள் கேட்கப்பட்டன.
கோவை மாவட்டம், வால்பாறையில் அதிமுக சாா்பில் அனைத்து பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு நேரடியாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, அவா்களின் குறைகளை கேட்டறிந்து தீா்வு கண்டு வருகின்றனா்.
அதன்படி தாய்முடி, முத்துமுடி, கெஜமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளா்களுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை அதிமுக தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது வழங்கி, தொழிலாளா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
Advertisement
இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, வாா்டு உறுப்பினா் மணிகன்டன் உள்பட பலா் உடனிருந்தனா்.