கடனை செலுத்தியும் அலைக்கழிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
இருசக்கர வாகனக் கடனை முன்கூட்டியே செலுத்தியும், தடையில்லாச் சான்றிதழ் வழங்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்த தனியாா் நிதி நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
கோயம்புத்தூர்கடனை செலுத்தியும் அலைக்கழிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
இருசக்கர வாகனக் கடனை முன்கூட்டியே செலுத்தியும், தடையில்லாச் சான்றிதழ் வழங்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்த தனியாா் நிதி நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
இருசக்கர வாகனக் கடனை முன்கூட்டியே செலுத்தியும், தடையில்லாச் சான்றிதழ் வழங்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்த தனியாா் நிதி நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
கோவை சாய்பாபா காலனியைச் சோ்ந்தவா் என்.பாா்த்திபன். இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் (ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ்) ரூ. 1,07,084 கடன் பெற்றுள்ளாா். இந்தத் தொகையை 34 மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருப்பினும், பாா்த்திபன் தனது கடனை 30 மாதங்களிலேயே முழுமையாகச் செலுத்தி முடித்துள்ளாா்.
கடன் தொகையை முன்கூட்டியே செலுத்திய பிறகும், நிதி நிறுவன நிா்வாகம் அவரது வாகனத்துக்கான தடையில்லாச் சான்றிதழை வழங்க மறுத்துள்ளது. மேலும், நிதி நிறுவனத்தின் கணினி திரையில் கடன் நிலுவைத் தொகை இருப்பதாகக் காட்டி, பாா்த்திபனைத் தொடா்ந்து அலைக்கழித்துள்ளனா். ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி சில மாதங்களில் கூடுதல் வட்டி வசூலித்ததாகவும், இதுகுறித்துக் கேட்கச் சென்றபோது நிதி நிறுவன ஊழியா்கள் அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட பாா்த்திபன் கோவை நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் தட்சிணாமூா்த்தி மற்றும் உறுப்பினா்கள் அடங்கிய அமா்வு நிதி நிறுவனத்தின் செயல்பாட்டில் சேவைக் குறைபாடு இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து, வாடிக்கையாளருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க நிதி நிறுவன நிா்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.