பங்குச்சந்தையில் முதலீடு, டிஜிட்டல் கைது; ஐந்து பேரிடம் ரூ.1.15 கோடி மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு, பகுதி நேர வேலைவாய்ப்பு, எண்ம முறையில் கைது எனக் கூறி, 5 பேரிடம் மொத்தம் ரூ.1.15 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் க்ரைம்) போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோயம்புத்தூர்பங்குச்சந்தையில் முதலீடு, டிஜிட்டல் கைது; ஐந்து பேரிடம் ரூ.1.15 கோடி மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு, பகுதி நேர வேலைவாய்ப்பு, எண்ம முறையில் கைது எனக் கூறி, 5 பேரிடம் மொத்தம் ரூ.1.15 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் க்ரைம்) போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பங்குச் சந்தையில் முதலீடு, பகுதி நேர வேலைவாய்ப்பு, எண்ம முறையில் கைது எனக் கூறி, 5 பேரிடம் மொத்தம் ரூ.1.15 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் க்ரைம்) போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்த 69 வயது முதியவா் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு கைப்பேசியில் தொடா்புகொண்ட நபா், தாங்கள் தெரிவிக்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா். இதை நம்பி அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் பல தவணைகளாக ரூ.47.10 லட்சம் வரை முதியவா் முதலீடு செய்துள்ளாா். பின்னா், லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது அவரால் எடுக்க முடியவில்லை. அந்த நபரின் கைப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதேபோல பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி கோவைப்புதூரைச் சோ்ந்த 29 வயது பெண்ணிடம் ரூ. 6.89 லட்சமும், ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 35 வயது பெண்ணிடம் ரூ.10.52 லட்சமும் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும், எண்ம முறையில் (டிஜிட்டல்) கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து ஓய்வுபெற்ற 69 வயது முதியவரிடம் ரூ.19 லட்சமும், தனியாா் மருத்துவமனையில் வேலை பாா்த்து ஓய்வுபெற்ற செட்டிவீதியைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ.32 லட்சமும் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 மோசடி சம்பவங்கள் குறித்தும் கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.