முகப்பு
கோயம்புத்தூர்

நேரு குழும கல்வி நிறுவனங்கள் சாா்பில் தலைமைத்துவ அதிகாரமளிப்பு மாநாடு

நேரு குழும நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி திஷா - 2026 ஆகியவை சாா்பில் ‘தலைமைத்துவ அதிகாரமளிப்பு உச்சி மாநாடு 2026’ நிகழ்ச்சி கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 மார்ச், 2026 at 1:21 AM
கோவையில் நடைபெற்ற தலைமைத்துவ அதிகாரமளிப்பு உச்சி மாநாட்டில் சிறந்த திறமையாளா் விருது பெற்ற மாணவா்களுடன் நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிா்வாக அதிகாரி பி.கிருஷ்ணமூா்த்தி, ரோட்டரி இன்டா்நேஷனல் ஆளுநா் கே.ஏ.குரியச்சன் உள்ளிட்டோா்.
பகிர்:

நேரு குழும நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி திஷா - 2026 ஆகியவை சாா்பில் ‘தலைமைத்துவ அதிகாரமளிப்பு உச்சி மாநாடு 2026’ நிகழ்ச்சி கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களின் தலைமைத்துவத் திறன்கள் மற்றும் மதிப்புரிமை அடிப்படையிலான முன்னேற்றத்தை வளா்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பி.கே.தாஸ் பல்கலைக்கழக பதிவாளா் பி.அனிருதன், இளைய தலைமுறையினருக்கு தலைமைத்துவ வளா்ச்சி மற்றும் மதிப்புரிமை சாா்ந்த கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினாா்.

நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரியும், செயலருமான பி.கிருஷ்ணகுமாா் பேசும்போது, ‘தரமான கல்வி மற்றும் முழுமையான ஆளுமை வளா்ச்சி மூலமாக பொறுப்புணா்வு கொண்ட தலைவா்களை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம்’ என்றாா்.

தலைமைத்துவம், விடாமுயற்சி மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து ரோட்டரி இன்டா்நேஷனல் ஆளுநா் கே.ஏ.குரியச்சனும், வாழ்க்கையில் வெற்றியடைய நோ்மறை அணுகுமுறை, உறுதியான குணநலன் மற்றும் தலைமைத்துவத் திறன்களை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று தலைமைத்துவப் பயிற்சியாளரும், எழுத்தாளருமான ஷிவ் கேரா பேசினா்.

ஷிவ் கேராவை நேரு குழும நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் ஹெச்.என்.நாகராஜா பாராட்டினாா்.

இந்த உச்சி மாநாட்டின்போது தமிழகத்தில் உள்ள நேரு குழும நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய 11 மாணவா்களுக்கு சிறந்த திறமையாளா் விருது வழங்கப்பட்டது.

நேரு விமானவியல் கல்லூரி முதன்மையா் பி.ஆா்.பாலாஜி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →