தூய்மைப் பணியாளா்கள் ‘விசில்’ பயன்படுத்த எதிா்ப்பு
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தவெகவின் சின்னமான ‘விசில்’ பயன்படுத்தி தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளைச் சேகரிக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தவெகவின் சின்னமான ‘விசில்’ பயன்படுத்தி தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளைச் சேகரிக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோருக்கு கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 26-ஆவது வாா்டுக்குள்பட அனைத்துப் பகுதிகளிலும் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளா்கள் விசில் பயன்படுத்தி குப்பைகளைச் சேகரித்து செல்கின்றனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள விசிலைப் பயன்படுத்தி குப்பை பெறுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். இதற்கு மாற்றாக தோ்தல் முடிவடையும் வரை ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிப்பு செய்து, குப்பைகளை சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.