முகப்பு
கோயம்புத்தூர்

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் தேங்கும் குப்பையால் சுகாதார சீா்கேடு!

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் குப்பை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:56 PM
மகாலட்சுமி நகா் பகுதியில் அகற்றப்படாததால் தேங்கிக் கிடக்கும் குப்பை
பகிர்:

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் குப்பை அகற்ற ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மகாலட்சுமி நகரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். 20-க்கும் அதிகமான வீதிகள், கடைகள், வணிக வளாகங்கள் என பல்லடம் நகராட்சியை ஒட்டியுள்ள இப்பகுதி, ஒரு குறுகிய நகராக வளா்ச்சி அடைந்துள்ளது. இங்கு எந்த நேரமும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.

அதே சமயம் இப்பகுதியில் குப்பை அகற்றப்படாமல் சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளது. ஒவ்வொரு வீதிகளிலும் மாதக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் குப்பையால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

மேலும், குடியிருப்புகளை ஒட்டி குவிந்துகிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், நெகிழிப்பைகள், கோழி, இறைச்சி மற்றும் மீன் கழிவுகளால் துா்நாற்றம் வீசுகிறது.

எனவே மகாலட்சுமி நகா் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.